Sunday, August 1

கனவுகளின் காதல் வலி

Friday, December 25

நீ

உன் காதோர கூந்தலை
கலைத்து போகும்
காற்றை போலத்தான் - நீயும்

அடிக்கடி என்னை
அழகாய்
கலைத்து விடுகிறாய் .......
***********************

என்ன மந்திரம் செய்தாய்

உன்னைவிட
அழகான பெண்கள்
எல்லாம் என்னைக்
கடந்து போகிறார்கள்...
உன்னைவிட
அக்கறையோடும் சிலர்
என்னை
நேசிக்கிறார்கள்...
இருந்தும்
உன்னை மட்டுமே
நினைக்கும்படியாய்
என்ன
செய்தாய் என்னை?
***********************

காதல் கவிதை

அன்று அவள் கைபிடிக்க என்னை விட்டாயே,
இன்று அவள் கைவிட்ட பிறகு-உன்,
கையை தாங்கி பிடித்தது நானேதான்.

இப்படிக்கு,
சிகரெட்.
*************************

காதல் வலி

கண்ணீர் விட மறுக்கிறேன்
கண்களில் இருக்கும்
நீ
கண்ணீராய் கரைந்து விட கூடாது என்பதற்காக.........
**********************************

உன் முத்தங்களை

தொலைபேசியில் தராதே
உன் முத்தங்களை..
அது முத்தத்தை விழுங்கிவிட்டு
வெறும் சத்தத்தை அல்லவா தருகிறது!!
**********************************

பிரிவு

வெயில் காலத்திலும்
மழை வந்தது
உன் பிரிவால்
என் கண்களில் . . .
***********************

உன் அழகு

கண்ணாடி முன் நின்று
உன்னை
நீ அழகு படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறாய் ,
ஆனால்
அந்த கண்ணாடியோ ,
உன்னை பார்த்து
தன்னை அழகு படுத்தி கொள்கிறது.
**********************************

கொலுசு

உன்னோடு
கூடவர ஆசையின்றி
விழுந்த
உன் கொலுசுதான்
உன்னோடு
கூடவர
என் ஆசையை வளர்த்தது............
***********************

நிம்மதி

யாருமே தொலைக்காத ஒன்றை
உலகமே இன்று வரை
தேடிக்கொண்டு இருக்கிறது.
- நிம்மதி
**************************

கோலம்

அவள் விரல் பட்ட பரவசத்தில்
வாசலிலேயே படுத்துக் கிடக்கிறது
கோலம்........
********************************

மழைத் துளிகளே!

ஓ!...
மழைத் துளிகளே!
நீங்கள் அதிஷ்ட்டசாலிகளா...?

உங்களில் எத்தனை பேர்
புண்ணியம் செய்தீர்கள்...?

ம்!...
புண்ணியம் செய்த துளிகள் மட்டுமே
இந்தப் புனிதம் நிறைந்தவளின்
மேல் விழுவீர்கள்!
********************************

கனவு காணுங்கள்:

கனவு காணுங்கள் - Dr. கலாம்

உங்கள் கனவில் மீனா வந்தால்
நீங்கள் வாழ்வில் வீனா போவீர்கள்..,

சிம்ரன் வந்தால் சீரழிந்து போவீர்கள்..,

சிநேகா வந்தால் செத்து போவீர்கள்..,

அசின் வந்தால் அழிந்து போவீர்கள்..,

ஆகையால் கனவு காணுங்கள்

காதலில் தவிக்கும் சந்தியாவை
பற்றி அல்ல...

கஷ்டத்தில் தவிக்கும்
இந்தியாவைப் பற்றி...

ஜெய்ஹிந்த்...
******************************************

எங்கே நீ சொல்??

நீ
இல்லாத உலகத்தில்
நான் பிணமாய் வாழ்வதைவிட

நீ
இருக்கும் உலகில்
நான் கல்லறையாய்
வாழலாம்.

எங்கே நீ சொல்........
***********************************

கோலம்போடுகிறாய்..?

எதற்காக
நீ கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்..?

பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு,
போதும்!
**********************

ரீல் கவிதை

மரம் வாடினால் தண்ணீர் விடுவேன்,
இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்,
நீ வாடினால் என் உயிரை விடுவேன் ,
நீ சந்தோஷ பட அடிக்கடி இப்படி ரீல் விடுவேன்....!!!
**************************************

உனையே நினைவு படுத்துகின்றன

அழகான பொருட்களெல்லாம்
உனையே நினைவு படுத்துகின்றன..
உனை நினைஊட்டும் அனைத்தும் அழகாகின்றன!!
********************************

புதைந்த காதல்

உன்னில் என்னையும்
என்னில் உன்னையும்
புதைத்துக்கொண்டது ஏன்?
என்றாவது ஒரு நாள்
நம் காதல்
செத்துப்போகும் என்றுதானே!

முதலில் நாம் ஒன்றாக இருந்து
காதல் செய்தோம்
பின்னர் நீ அங்கிருந்தும்
நான் இங்கிருந்தும்
அதற்கு காரியம் செய்தோம்
உன் நினைவும் என் நினைவும்
வரும்போதெல்லாம்
அதற்கு திவசம் கொண்டாடுகிறோம்
ஒரு புதையலைப் போல பொக்கிஷமாய்
மனதிற்குள் பூட்டி பூஜிக்கிறோம்
வெட்கம்கெட்டு வெளிப்படையாய் திரிகிறது உடல்
****************************************************
உன்னை என் இதயம் என்று சொல்லமாட்டேன்
ஏன் என்றால்....
நீ துடித்து நான் உயிர் வாழ விரும்பவில்லை...
**************************************
கண்களை மூடுகிறேன்
கனவாய் வருகிறாய்
கண்களைத் திறந்தாலோ
நிஜமாய் வருகிறாய் !!!
*************************

ஆறு குணங்கள்:

1. உண்மை உரைத்தல்.

2. தர்மம் செய்தல்.

3. சோம்பல் தவிர்த்தல்.

4. பொறாமை விடுதல்.

5. பொறுமை கொளல்.

6. தைரியம் பேணல்.

*************************

பதினாறு பேறுகள்:

1. நன்மக்கள்.

2. செல்வம்.

3. அழகு.

4. நோயின்மை.

5. இளமை.

6. கல்வி.

7. வாழ்நாள்.

8. நல்வினை.

9. பெருமை.

10. துணிவு.

11. வலிமை.

12. வெற்றி.

13. நல்லுணர்வு.

14. புகழ்.

15. நுகர்ச்சி.

16. நல்ல நண்பன்.

*************************

வாழ்வில் முன்னேற பதினெட்டுப் படிகள்:

1. வாழ்க்கை ஒரு சவால்---அதைச் சமாளி.

2. வாழ்க்கை ஒரு பரிசு---அதைப் பெற்றுக்கொள்.

3. வாழ்க்கை ஒரு சாகசம்---அதில் துணிவு காட்டு.

4. வாழ்க்கை ஒரு சுகம்---அதை அடைந்துவிடு.

5. வாழ்க்கை ஒரு கடமை---அதை முடித்துவிடு.

6. வாழ்க்கை ஒரு விளையாட்டு---அதில் பங்கு கொள்.

7. வாழ்க்கை ஒரு துன்பம்---அதை எதிர்கொள்.

8. வாழ்க்கை ஒரு புதிர்---அதற்கு விடை காண்.

9. வாழ்க்கை ஒரு பாடல்---அதைப் பாடிவிடு.

10. வாழ்க்கை ஒரு வாய்ப்பு---அதைப் பயன்படுத்து.

11. வாழ்க்கை ஒரு பயணம்---அதைக் கடந்துவிடு.

12. வாழ்க்கை ஒரு வாக்குறுதி---அதைக் காப்பாற்று.

13. வாழ்க்கை ஒரு காதல்---அதை அனுபவி.

14. வாழ்க்கை ஒரு வனப்பு---அதன் புகழ்பாடு.

15. வாழ்க்கை ஒரு போராட்டம்---அதனுடன் போராடு.

16. வாழ்க்கை ஒரு குழப்பம்---அதைத் தீர்த்துவிடு.

17. வாழ்க்கை ஒரு இலக்கு---அதைத் தொடர்ந்துவிடு.

18. வாழ்க்கை ஒரு தெய்வீகம்---அதைப் புரிந்துகொள்.

*************************************************

Wednesday, December 23

பள்ளிச்சிறுவன்
புத்தகத்தில்
மயிலிறகை ஒழித்துவைப்பதைப் போல
உன்னை
மனதிற்குள் ஒழித்து
வைக்கிறேன் நான்.
வைத்திருப்பவனின்
பிரியங்களை ஒரு போதும்
புரிந்துகொண்டதேயில்லை
மயிலிறகும் நீயும்.
*********************************

வார்தைகளால்
காயப்படுத்துவாய்.
பார்வைகளால்
மருந்திடுவாய்.
மருந்திற்கு
ஆசைப்பட்டு
காயப்பட்டுக்கொண்டே
இருக்கிறேன்
நான்.
**************************************************
காற்றை சுவாசிக்கிறேன்
உயிர் வாழ அல்ல
உன் மூச்சு காற்றும் அதில்
கலந்திருப்பதால்..

**************************

தயவு செய்து
மழையில் நனையாதே
காய்ச்சல்
மழைக்கு
**************************
எனது வயது,
வளமை, கனவு, கல்வி, உறவு, நட்பு,
உயரம், எடை,தொடர்பு, தொழில்,
இன்னும்
ஏதேதோ ஆரய்ந்து
தயங்குகிற உன்னை,
உயிராய்க்கொள்ள
உன் ஒற்றை
தெற்றுப்பல்
சிரிப்பே போதுமானதாக இருக்கிறது எனக்கு....
*************************************

Sunday, December 13

உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……

***********************
வெறுக்க விரும்புகிறேன்
உன்னை நான்
விரும்பி வெறுக்கிறாய்
என்னை நீ….

**********************
என்னை கொல்ல
வாள் வேண்டாம்
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…

****************
நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு
ஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது?…..

************************

சொல் அன்பே

எப்படி மறந்தாய்
சொல் அன்பே
நானும்
உன்னை
மறக்க…

**********


உன்னால் மட்டுமே முடியும்

உன்னால் மட்டுமே
முடியும்
இதயத்திற்கு
இதமான
அன்பு கொடுத்து
பிரிவு எனும்
இடியும் கொடுக்க…

**********************

எப்படி முடியும்

உந்தன் நினைவுகள்
என் மனதில்
கடிகார முற்கள்
போல்இடைவிடாது
ஓடிக்கொண்டு
இருக்கும்போது.
எப்படி உன்னை மறக்கமுடியும்…….

***************************************

ஏங்குபவன் அல்ல

நான் முத்தங்களுக்காக ஏங்குபவன் அல்ல..
இருந்தாலும்
உன் எதிர் வீட்டு குழந்தையை
கொஞ்சி அளவில்லாமல்
முத்தமிடும் போதெல்லாம்...
நானும் அந்த குழந்தையாக....!? ..!

********************************

என் செல்ல உயிர் கொல்லியே...!

உனக்கு எழுதும்...
'காதல் கடிதங்களின்' எடை
அதிகரிக்க அதிகரிக்க....

உன் பதில் கிடைக்காத உயிர் வலியால்..
என்னுடைய எடை
குறைந்து கொண்டே போகிறது....!!

*******************************

என் கனவுகளில்..

நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி
உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்...!

*******************************

தோழி

நான் ராசிபலன் பார்ப்பதில்லை

இப்பொழுதெல்லாம்...

நீ

தோழியாக கிடைத்து விட்ட பிறகு..!!

*********************************

பிரிந்து விடுவோம்

நீ

எதை சொன்னாலும் அப்பிடியே

நம்பிவிடும் மூடன் நான்,

என்று தெரிந்துதான் சொன்னாயோ..?

இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய

இரக்கமில்லாத...கொடூரமான...

அந்த

"பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை..??

*****************************************

அம்மா ....

அம்மா ....

பிறந்தவுடன் சொன்னதும்..

உயிரை

வலியோடு முடிக்கும் போது சொல்வதும்,
அம்மா....

.
'அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா...!'

உன்
அன்பின் கதகதப்பும்,
வலிக்காத தண்டனைகளும்..,

இனி
யாராலும் தர முடியாது..அம்மா..!

கட்டெறும்பு கடித்த போதும் .,
காதல் போன போதும்..,
"அம்மா"
என்று சொல்லி
ஆறுதல் அடைந்தேன்..??

நீ
இங்கே இல்லாமல் போனதாய்
ஊர் சொல்கிறது..

ஆனால் இன்னமும்
என் காலைநேர
கனவில் வந்து அழகாக்குகிறாய்
என் நாட்களை...

அம்மா..
அழகாக்குகிறாய் என் நாட்களை...!!

**************************************

Monday, December 7

சின்னதாய்,
கவிதை ஒன்று
சொல்ல சொன்னாய்!
”நீ”
என்றேன்!

***********************
என் அம்மா உன் அம்மாவும்
உன் அப்பா என் அப்பாவும்
நல்ல நண்பர்கள் ஆனதைவிட;
எனக்கு சந்தோசம்,
எங்கள் வீட்டில் பூக்கும் ரோஜாவும்
உந்தன் கூந்தலும் ராசி ஆனதில்தான்!

******************************************
கண்ணில் முத்தமிட வந்தேன்.
இமை ம(ப)றித்துக்கொண்டது.

*****************************************
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!
**************************************************
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை
**********************************************************
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

**************************************************************
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

*******************************************************
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

***************************************************
நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*****************************************